Annamalai published book on what Modi did for india

தமிழகம் முழுவதும் ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று ராமேஸ்வரத்தில் ஊழலுக்கு எதிரான நடைபயணத்தைத் தொடங்கவுள்ளார். இன்று மாலை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு, ‘என் மண்; என் மக்கள்’ நடைபயணத்தைத் தொடங்கிவைக்கவிருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் நேற்றுசெய்தியாளர்களைச்சந்தித்த அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ‘என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இந்தப் பாதயாத்திரைநடக்க இருக்கிறது. தமிழகத்தில் 5 பகுதியாகநடக்கும்இந்த யாத்திரையின் மூலம் 234 தொகுதிகளுக்கும் செல்கிறோம். மூத்த தலைவர்கள் இதனை வழிநடத்துவார்கள், ஆகஸ்டு 22 ஆம் தேதி வரை நடக்கும் முதல் பகுதி யாத்திரைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமைதாங்குகிறார். கட்சியின் மாநிலத்தலைவராக நான் எல்லா இடங்களிலும்கலந்துகொள்கிறேன்.

Advertisment

இதில்பங்கேற்கக்கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் அனைவரையும் அழைத்திருக்கிறோம். அண்ணன் எடப்பாடி பழனிசாமி மருத்துவ சிகிச்சையில் இருப்பதால்ஓரிரு நாளில் கலந்துகொள்வார். யாத்திரையின்தொடக்கவிழாவில் மோடி என்ன செய்தார் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்படுகிறது. ராமேஸ்வரத்தில் ஒரு லட்சம் புத்தகம் விநியோகம் செய்யப்படவிருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் பிரச்சனையைத்தீர்க்க மத்திய அரசு செய்தது என்னென்ன? என்பதைப் பற்றிப் பேசவிருக்கிறோம்.

எழுதிக்கொடுத்ததைத்தான் முதல்வர் ஆக்ரோஷமாக வாசித்தார். அமைச்சர் பொன்முடியின் ரூ.41 கோடி வைப்பு நிதி குறித்து அவர் ஏன்பேசுவதில்லை? வேறு எதையோ பேசிக்கொண்டிருக்கிறார். திமுக ஊழல் பட்டியலை வெளியிட்டதற்காக எங்கள் மீது திமுககோபத்தைக்காட்ட நினைத்தால் அதனைஎதிர்கொள்ளத்தயாராகஇருக்கிறோம். ஊழலுக்குஎதிராகத்தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்போம்” என்றார்.

Advertisment