தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சரானதைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை கடந்த 16ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 16ஆம் தேதி இவர் சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று (21.07.2021) மீண்டும் கமலாலயத்தில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைச் சந்தித்தார்.