மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “குடிவாரிக் கணக்கெடுப்பு தான் சதி ஒழிப்பிற்கு முதல் முயற்சி. குடிவாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அண்ணாமலை, ‘என்ன கேள்வி கேட்டாலும் அவர் (சீமான்) பதில் சொல்கிறார் அவர் என்ன பெரிய ஞானியா’ என கேட்கிறார். அறிவது அறிவு, உணர்வது ஞானம். நான் எதையும் உணர்வேன். என்னிடம் பதில் உள்ளது. அவர் கேள்வி கேட்கிறார். நான் சொல்கிறேன். அண்ணாமலையிடம் பதில் இல்லை. அண்ணாமலை பேசாமல் இருக்கிறார்.
ஸ்டாலின் ஒன்றும் செய்யவில்லை என்று அண்ணாமலை சொல்லுகிறார். அது எனக்கும் தெரியும். உங்கள் பிரதமர் 8 ஆண்டுகளாக என்ன செய்தார்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.