எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக அதிமுக நிர்வாகிகள் மாநாட்டுக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று மதுரை ஜான்சிராணி பூங்கா அருகே ரிக்ஷா பேரணியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அண்ணாமலை பாஜகவின் மாநில தலைவர். ஜஸ்ட் லைக் அவ்வளவுதான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தில் மோடி, எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார். அவருக்குத்தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” எனத்தெரிவித்தார்.