Published on 27/05/2023 | Edited on 27/05/2023

மற்றவர் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கலைஞரின் பேனா மையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் ஆனார் என திமுகவின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேசி இருந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அண்ணாமலை சந்தித்தார்.
அப்போது அவர், "நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டப்பட்டு என்ஜினீயரிங், மருத்துவம் படித்தவர்களின் உழைப்புக்கு திமுகவினர் ஸ்டிக்கர் ஒட்டி சொந்தம் கொண்டாடுகின்றனர். இன்னொருவரின் குழந்தைக்கு ஏன் பெயர் வைக்கிறீர்கள். கலைஞர் குடும்பத்தில் பிறந்தவர்களில் எத்தனை பேர் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆனார்கள். ராசா குடும்பத்தில் ஏன் யாரும் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆகவில்லை" எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.