Annamalai challenged the Chief Minister stalin whether ready to contest alone without the DMK coalition

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றில், “பாஜக அதிமுகவைபயமுறுத்தி குளிர்காய்கிறது. பாஜகவால் தமிழ்நாட்டில் கூட்டணி இல்லாமல் சொந்தக்காலில் நின்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது.” எனத்தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர் அணணமலை பாஜக தனித்துப் போட்டியிடத்தயங்காது.திமுக கூட்டணி இல்லாமல் தனித்துப் போட்டியிடத்தயாரா எனச் சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர்பதிவில், “1967 ஆம் ஆண்டு, திமுக முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததுஅதன் சொந்தப் பலத்தில் அல்ல. சுதந்திரா கட்சி மற்றும் சிபிஎம் கட்சிகள் உடனான கூட்டணியின் காரணமாகத்தான்திமுக ஆட்சிக்கு வந்தது. 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும் அதன் தனிபலத்தால் அல்ல. 12 கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே.திமுக ஒரு தேர்தலில் கூடத்தனித்துப் போட்டியிட்டதில்லை. தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காகப் பல கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்தே போட்டியிட்டிருக்கிறது. அப்படியும் நீங்கள் மோசமான தோல்வியைச் சந்தித்ததேர்தல்களும் உண்டு.

எதார்த்தத்தை எதிர்கொள்ளுங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.துணைப்பிரதமராகும் உங்களின் லட்சியம் கலைந்து போய் நெடுங்காலம் ஆகிவிட்டது. பிரதமர் மோடி தலைமையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலிலும் பாஜக மாபெரும் வெற்றியைப் பெறும். கடந்த காலங்களில் தமிழக பாஜக தனித்துப் போட்டியிட்டதுண்டு. இனிவரும் காலங்களில் அதை மீண்டும் செய்யத் தயங்காது. நான் உங்களுக்குச் சவால் விடுகிறேன். கூட்டணி இல்லாமல் போட்டியிட திமுக தயாரா?”என்று சவால் விடுத்துள்ளார்.