முருகனுக்கு அண்ணாமலை தடை!

Annamalai ban for Murugan!

வேலூரில் நடந்த மத்திய மோடி அரசின் 9 ஆண்டுக்கால சாதனைகள் விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்டுவிட்டு சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அமித்ஷா வேலூர் செல்லதிட்டமிடப்பட்டு அதன்படி சென்றார்.

தென்சென்னை நாடாளுமன்றத்தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, ஹெலிகாப்டரில் அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர் எல். முருகனும் சென்று வேலூர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், மேற்கண்ட இரு கூட்டங்களிலும் முருகன் கலந்துகொள்ள முடியாதவாறுபார்த்துக் கொண்டாராம் அண்ணாமலை.

மேற்கண்ட இரண்டு கூட்டங்களிலும் முருகன் கலந்து கொள்ள முடியாத சூழலை அண்ணாமலை உருவாக்கியதால், முருகனின் ஆதரவாளர்கள்கடுப்பில் இருக்கின்றனர்.

Annamalai
இதையும் படியுங்கள்
Subscribe