Skip to main content

’அண்ணனுக்கு மாநில பொறுப்பு வேண்டும்’ - அழகிரி ஆதரவாளர்கள் கருத்து

Published on 21/08/2018 | Edited on 27/08/2018
az

 

அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே இருந்து வந்த கருத்து வேறு பாடு மூலம் கடந்த நான்கு  வருங்களுக்கு முன்பு அழகிரியை கட்சியிலிருந்து ஓரம் கட்டியது அறிவாலயம். அதை தொடர்ந்து மதுரை, தேனி மாவட்டத்தில் பெரும்பான்மையாக  இருந்து வந்த அழகிரி ஆதரவாளர்களையும் தலைமை கட்சியிலிருந்து கட்டம் கட்டியது. அதன் பின் அழகிரியும் அரசியலில் ஆர்வம்  காட்டாமல் இருந்து வந்தார். ஆனால் அழகிரி ஆதரவாளர்களோ பிறந்த நாளை மட்டும் வெகு  சிறப்பாக மதுரை, தேனி மாவட்டத்தில் நடத்தி  வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள் .


     இந்த நிலையில் தான் உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த தலைவர் கலைஞர் திடீரென கடந்த 7ம்தேதி மறைந்தார்.  கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த அழகிரி,   கட்சியில் உள்ள தொண்டர்கள் எல்லாம்  என் பக்கம் இருக்கிறார்கள் என்று  அதிரடியாக பத்திரிக்கைகளுக்கு பேட்டி  கொடுத்தார். அதை தொடந்து வருகிற 5ம்தேதி அழகிரி சென்னையில் பேரணி  நடத்தவும் இருக்கிறார்.
   

       இந்த நிலையில் திமுக  தலைமையும் செயற்குழுவை கூட்டியதில் கூட தளபதிதான் கட்சி தலைவராக வர வேண்டும். அவர் வழியில் தான் நாங்களும் தொண்டர்களும் இருக்கிறார்கள் என்று மாநில பொறுப்பில் உள்ள உ.பிகளும் வெளிப்படையாக பேசி இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் வருகிற 28 ம்தேதி பொது குழுவையும் திமுக தலைமை கூட்டி இருக்கிறது.


 
          இது பற்றி தேனி மாவட்டத்தில் உள்ள அழகிரி ஆதரவாளர்கள்....... தலைவர் இருக்கும் வரை அண்ணன் அழகிரி  கட்சியை பற்றி எதுவும் பேசவில்லை. அந்த அளவுக்கு தலைவர் மேல் மரியாதை வைத்து கொண்டு தான் தளபதி செயலையும் கண்டு  கொள்ளவில்லை. அப்படி  இருந்தும் மீண்டும்  அண்ணனை கட்சியில் இணைத்து பொறுப்பும் தரவில்லை. அதனால் டென்ஷன் அடைந்த அண்ணன்  தற்பொழுது தலைவர் மறைவுக்கு பிறகு விஸ்வரூபம் எடுத்து பேட்டி, பேரணி என அரசியலில்  அதிரடியாக மீண்டும் குதித்து  இருக்கிறார்.


       ஆனால்  தலைவர் இருந்த போது அண்ணனுக்கு தென் மாவட்ட பொறுப்பாளர் போஸ்டிங் கொடுத்ததால் திருமங்கலம்  இடைத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற வைத்தார்.   அதன் மூலம் தென் மாவட்டங்களில்  அண்ணனுக்கு தனி செல்வாக்கு  இருக்கு. அதுபோல் வட மாவடங்களிலும் எங்களை போல் அண்ணன் ஆதரவாளர்களான பெரும்பாலான கட்சிகாரர்கள் இருக்கிறார்கள். அதனால   அண்ணன் தற்பொழுது தமிழக  அளவில்  அரசியல்  செய்ய இருக்கிறார். அதனால தான்  அண்ணன் விசுவாசிகளான நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால்,  அண்ணன்  அழகிரியை முதலில் கட்சியில் சேர்க்க வேண்டும்.

 அப்படி  அண்ணனை கட்சியில் சேர்த்தால்தான்  கட்சி மேலும் வழுவடையும்.  அதன் மூலம் அரசியல் எதிரிகளும் நம்மை கண்டு  பயப்படுவார்கள். அதை விட்டுவிட்டு நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு மூலம் மற்ற அரசியல் கட்சிகள்  அதன் மூலம் குளிர்காய்ந்து விடும். அதனால தலைவர் அடையாளம் காட்டிய தளபதியே தலைவராக இருக்கட்டும்.  ஆனால்  எங்க அண்ணன்  அழகிரிக்கு மாநில பொறுப்பு கொடுக்க வேண்டும்.  அதன் மூலம்   அண்ணனும் மாநில அளவில் அரசியல் பண்ணுவார்.  அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40தொகுதிகளையும் கைப்பற்றுவதின் மூலம் சட்ட மன்ற தேர்தலில்  ஆட்சியை பிடிக்க முடியும். அதனால பொதுக்குழுவில் அண்ணனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்க வேண்டும் அதுதான்  எங்களுடைய விருப்பமாகவும் இருக்கிறது என்று கூறினார்கள்.  ஆக திமுக தலைமை நடத்தும் பொதுக்குழுவில் அழகிரிக்கு பொறுப்பு கொடுத்தால் பேரணியை  கேன்ஷல் பண்ணிவிடுவார்.  இல்லை  என்றால் பேரணியை நடத்தி ஆழகிரி தன் பலத்தை  காட்ட இருக்கிறார்  என்பது தான் உண்மை.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.