
தூத்துக்குடி குண்டு வீச்சில் இறந்த காவலர் சுப்பிரமணியண் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாய் நிதி உதவி அறிவித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
"இந்த அறிவிப்பு, காவல் துறை மரணங்களில் தமிழக அரசு பாரபட்சம் காட்டுவதை வெளிக்காட்டுகிறது" எனக் குற்றம் சாட்டுகிறார் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன்.
இது குறித்து பேசும் அனிதா கிருஷ்ணன், "பணியில் இருந்தபோது இறந்த கிருஷ்ணகிரி, மதுரவாயல், நாகர்கோவில் காவல்துறையினர்குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக நிதி உதவி அறிவிக்கப்பட்டது. ஆனால், தூத்துக்குடி காவலர் மரணத்திற்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி என்பதால் இந்தப் பாரபட்சமா? தனது தவறைத் திருத்துக்கொண்டு, காவலர் சுப்பிரமணியன் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிதி உதவியளிக்க வேண்டும்" என்கிறார் அனிதாராதா கிருஷ்ணன்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)