Skip to main content

ஆந்திர மாநில கொள்ளையர்களை கைது செய்து ரூ.2 லட்சம் பறிமுதல்

Published on 08/01/2020 | Edited on 08/01/2020

 

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருசக்கரவாகனத்தின் பெட்டியை உடைத்து ரூ2 லட்சம் திருடப்பட்டது தொடர்பாக ஆந்திர மாநில கொள்ளை  கும்பலை காவலில் இருந்து எடுத்து சிதம்பரம் காவல்துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

Andhra



சிதம்பரம் அருகே உள்ள ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கமலா. இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி சிதம்பரம் கீழவீதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில்  2 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு சிதம்பரம் வேணுகோபால்பிள்ளை தெருவில் உள்ள ஒரு ஜவுளி கடையில் துணி எடுக்க சென்றனர்.
 

துணிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பி வந்து பார்த்தபோது  அவரது பைக்கில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ 2 லட்சம் திருடப்பட்டிருந்தது.  இது குறித்து லோகநாதன் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
 

இந்த நிலையில் திருச்சி மணப்பாறை அருகே கடந்த நவம்பர் மாதம் 26ம் தேதி பணம் கொள்ளை வழக்கு சம்பந்தமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், நகரி தாலுகா, காவேரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் சரவணன் (30), குமாரசாமி மகன் பாபு (45 ), ரவி மகன் மோகன் (27), வெங்கடாஜலம் மகன் ரமணா (31) ஆகிய 4 பேர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்து   கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


 

 அப்போது அவர்களிடம் காவல்துறையினர்  நடத்திய விசாரணையில் சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் உள்பட பல பகுதிகளில் இருசக்கர வாகனங்களை குறி வைத்து அதன்  பெட்டியை உடைத்து பணம் திருடியது தெரிய வந்தது.


 

 இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன்(பொறுப்பு),  சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் மற்றும் காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் இருந்த 4 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்தினர். அப்போது ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதனின் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ 2 லட்சம் பணத்தை திருடியது தெரிய வந்தது.
 

இவ்வாறு திருடிய பணத்தை சிதம்பரத்திலிருந்து புவனகிரி செல்லும் புறவழிச்சாலை பகுதியில் காலி மனை ஒன்றில் பள்ளம் தோண்டி பாலிதீன் பையில் வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இதையெடுத்து  காவல்துறை பணத்தை கைப்பற்றினர். மேலும் இவர்களுக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.