/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/01-kiren-art.jpg)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஒருவர் பாஜகவில் தன்னை இணைத்துகொண்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம்பிரிக்கப்படுவதற்குமுன் ஒருங்கிணைந்தஆந்திர மாநிலத்தின் கடைசி முதலமைச்சராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்தவர் கிரண்குமார் ரெட்டி. இவர் ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிந்த பிறகு சமக்கிய ஆந்திராஎன்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார்.
ஆந்திர மாநிலம் முழுவதும் தேர்தலில் போட்டியிட்டு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் தோல்வி அடைந்தார். அதனைத்தொடர்ந்து மீண்டும் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்து கொண்டார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியநிலையில், இன்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தன்னைபாஜகவில்இணைத்துகொண்டார்.
Follow Us