Advertisment

பெண்வேடமிட்ட  எம்.பி !!!

lady get up mp

ஆந்திர மாநிலத்திற்கு தனி அந்தஸ்து கேட்டு ஆந்திர எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் போராடிவருகின்றனர். தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.கவின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் கோரிக்கைவைத்து போராடிவருகிறது. இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சியை எம்.பி ஒருவர்தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில்நாடாளுமன்றத்திற்கு பெண் வேடமிட்டுவந்திருந்தார்.

Advertisment

சித்தூர் தொகுதிஎம்.பி சிவபிரசாத் பெண் வேடமிட்டுதனது எதிர்ப்பை பதிவுசெய்தார். நிருபர்களிடம் சிவபிரசாத் இதுகுறித்து கூறுகையில்.

Advertisment

நீங்கள் ஆந்திர பெண்களுக்கு எத்தனையோ வாக்குறுதிகள் கொடுத்தீர்கள்அதனையெல்லாம் செய்தீர்களா? ஆந்திரப்பெண்கள் கோபமடைந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இதற்கெல்லாம் எத்தனைப்போராட்டங்கள் செய்திருப்போம். நீங்கள் வந்தால் நாட்டிற்கு ஏதாவது நல்லது செய்வீர்கள் என்று நினைத்தோம். நீங்கள் என்னவென்றால்பணமதிப்பிழப்பைக் கொண்டுவந்து அந்த பாரத்தை எங்கள் தலையில் வைத்தீர்கள். உங்களுக்கு தெரியுமா கடைக்குச்சென்று இட்லி சாப்பிடக்கூடமக்கள் அஞ்சுகிறார்கள். பெண்கள் நகைவைத்துக்கொள்வதற்கும் ஒரு கட்டுப்பாடு. உங்களுக்குத்தெரியுமா ஏ.டி.எம் வாசலில் எத்தனை நபர்கள் இறந்தார்கள் என்று? உங்களுக்குத்தெரியுமா இன்னும் கொஞ்சநாள் போனால் பெண்களின் தாலியைகூட ஆதாருடன்இணைக்கசொல்வார்கள் போல என்று கூறினார். அப்போது அவர்அவர் ஆந்திர பெண்ணைப்போலவே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது முதல்முறை அல்ல. இதற்கு முன்பு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபொழுது, அமராவதி ஆற்றின்கட்டுமானத்திற்கு நிதி வேண்டி விவசாயிகள்போல்சட்டை,பஞ்சாமற்றும்மாலை அணிந்து, பானையில் தண்ணீர் வைத்துக்கொண்டு பிரதமரிடம்சென்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

Andhra Pradesh Narendra Modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe