Advertisment

மக்களோடு தங்கி உதவி பண்ணுங்க... அமைச்சர்களுக்கு அதிரடி உத்தரவு போடும் ஜெகன் மோகன்! 

cm

Advertisment

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாயுடுதோட்டா அருகே ஆர்.ஆர்.வெங்கடப்புரத்தில் இயங்கி வரும் எல்.ஜி.பாலிமர்ஸ் (LG Polymers industry) இரசாயன ஆலையில் 07/05/2020 அன்று அதிகாலை ஏற்பட்ட விஷவாயு கசிவால், அப்பகுதியில் சுமார் 5 கி.மீ தொலைவுக்கு விஷ வாயு பரவியது. இந்த விஷவாயுகசிவால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்குச் சென்று நேரடியாகசந்தித்து ஆறுதல் தெரிவித்த ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, இந்த விஷவாயு கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் எனவும் அதிரடியாக அறிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு பின் எல்.ஜி இரசாயன ஆலையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது நிலைமை சற்று சீராக இருப்பதால் முகாம்களில் தங்கியிருந்த மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதேபோல் ஏ.சி., சமையலறை, திறந்த வெளி நீர், கால்நடை தீவணங்கள் உள்ளிட்டவற்றை வல்லுநர் குழு ஒப்புதல் அளிக்கும்வரை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தங்கி, மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய வேண்டும் என்றும் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

politics minister jeganmohan reddy cm Andhra
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe