Advertisment

“ராமதாஸின் அழுத்தத்தால் தான் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது” - அன்புமணி பேச்சு

Anbumani's speech OBC got reservation only due to Ramadoss' pressure

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் நேற்று (11-05-25) பாமகவின் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. இம் மாநாட்டில் பாமக சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த மாநாட்டு மேடையில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “இந்தியாவில்ஓபிசி இட ஒதுக்கீடு பெற்று தந்தது இரண்டு பேர். ஒன்று ஆணைமுத்து,மண்டல் கமிஷனை கொண்டு வந்தது. அடுத்தது,நம்முடைய ராமதாஸ் இல்லை என்றால் இன்று இந்தியஅளவில்ஓபிசிக்கு கல்வியிலே 27 விழுக்காடுஇன்று வரைக்கும்வந்திருக்காது. ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் அந்த கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டு,சோனியா காந்தியை பார்த்து நீங்கள் இட ஒதுக்கீடு கொண்டு வருவீர்களா? இல்லையா? இல்லை என்றால் நாங்கள் இந்த கூட்டணியை விட்டு வெளியேறுகிறோம் என்று ஆவேசமாகபேசினார். சோனியா காந்தி, ராமதாஸை பார்த்து டாக்டர் கூல் டவுன் பண்ணுங்க அமைதியா இருங்க பேசிக்கலாம் என்று சொன்னார்.

அதன்பிறகு அன்று மாலை மீண்டும்சந்தித்து சோனியா காந்தி முடிவெடுத்தார். ராமதாஸ் அழுத்தத்தால்இந்தியாவில்ஓபிசிக்கு கல்வி நிலையத்தில் 27% இட ஒதுக்கீட்டை அறிவித்தார்சோனியா காந்தி. எவ்வளவு பெரியவரலாறு, இது யாருக்காவதுதெரியுமா? அருந்ததிகளுக்கு 3 விழுக்காடு, இஸ்லாமியர்களுக்குமூன்றரை விழுக்காடு, எம்பிசி 20 விழுக்காடு, வன்னியர்களுக்கு 10.5விழுக்காடு, மத்தியில் மருத்துவத்துறையில் பட்டியலின மக்கள் பழங்குடிமக்களுக்கு 22.5% இடஒதுக்கீடு, இதர பிற்படுத்த மக்கள்ஓபிசிக்கு 27% இதுதான் வரலாறு.

Advertisment

ஆனால், அந்தஅளவுக்கு ராமதாஸுக்கு அங்கீகாரம் இருக்கிறதா? இந்த சமுதாயத்தில் பிறந்ததால் அது இல்லை. தமிழ்நாட்டில்தனிப்பெரும்சமுதாயம், இன்றைக்கு படிப்பறிவு இல்ல குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது, கூலிவேலை செய்து கொண்டிருக்கிறது, விவசாயம்செய்து கொண்டிருக்கிறது, எந்த தொழிலும்கிடையாது. இந்த சமுதாயத்தை ஆண்டுகொண்டிருக்கின்ற கட்சிகள் எல்லாம் வெறும்வாக்கு வங்கிகளாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நம்மை எல்லால் வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்துகிறார்கள்” என்று பேசினார்.

anbumani anbumani ramadoss pmk
இதையும் படியுங்கள்
Subscribe