ADVERTISEMENT

முழுமையான ஊரடங்கு மட்டும்தான் சிறந்த வழி... அன்புமணி

03:54 PM Mar 24, 2020 | george@nakkheeran.in

ADVERTISEMENT

கொரோனாவைத் தடுப்பதற்காக 144 தடை உத்தரவை எடப்பாடி அரசு பிறப்பித்திருக்கும் உத்தரவை எதிர்க்கிறது பாமக. கொரோனாவைத் தடுப்பதற்கு 144 தடை உத்தரவு போதுமானதல்ல ; முழுமையான ஊரடங்கு மட்டும் சிறந்த வழி என வலியுறுத்தியிருக்கிறார் பாமக எம்.பி. டாக்டர் அன்புமணி.

ADVERTISEMENT

இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அவர், ‘’ கொரோனா நோய்ப்பரவல் கடந்த 4 நாட்களில் 165 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அச்சமளிக்கும் வேகம். உடனடியாக கட்டுப்படுத்தபப்ட வேண்டும். அதனால்தான் முழுமையான ஊரடங்கை அமல்படுத்துங்கள் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். நோய் பரவுதலின் தீவிரத்தை உணர்ந்து 19 மாநிலங்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளன. அதனை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். மக்கள் பொதுவெளியில் நடமாடுவது தடுக்கப்பட்டால்தான் கொரோனாவைத் தடுக்க முடியும். ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 144-வது பிரிவை அமல்படுத்தி அத்தியாவசியமற்ற கடைகளையும் அலுவலகங்களையும் மூடுவது, அனைத்து வகைப் போக்குவரத்துகளையும் நிறுத்துவது உள்ளிட்டவைகள் மட்டுமே தீர்வாகாது.

144 தடை உத்தரவின்படி 5-க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் கூடுவதைத்தான் தடுக்கிறது. 5 பேர் வரை கூடுவதைத் தடுக்கவில்லை இந்தச் சட்டப்பிரிவு. இந்த நடைமுறைகள் எப்படி நோய் பரவலைத் தடுக்கும்? கொரோனா என்பது மிகக் கொடிய நோய். கொரோனா பாதிக்கப்பட்டவரின் 3 அடி சுற்றளவில் ஒருவர் இருந்தால் அந்த நோய் தொற்றிக்கொள்ளும். அப்படியிருக்கையில் பொது மக்களின் நடமாட்டத்தை முற்றிலுமாக தடுப்பதுதான் சிறந்த வழியாகும். இந்தியத் தொற்று நோய் சட்டமும் இதைத்தான் சொல்கிறது. அதனால், 144 தடை உத்தரவுக்குப் பதிலாக முழுமையான ஊரடங்கை அறிவிப்பது ஒன்றுதான் கொரோனாவைத் தடுக்க சரியான தீர்வு ‘’என்று எடப்பாடி அரசுக்கு வலியுறுத்தியிருக்கிறார் டாக்டர் அன்புமணி. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 24-ந்தேதி காலையில் தொடர்புகொண்டு பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 144 தடை உத்தரவுக்குப் பதிலாக முழுமையான ஊரடங்கை அறிவிக்கப் பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT