நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக 38 இடங்களை கைப்பற்றியது.அதிமுக,பாஜக கூட்டணி சார்பாக தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே வெற்றி பெற்றார்.இந்த நிலையில் அவருக்கு மத்தியில் இணை அமைச்சர் பதவி கோருவதாக செய்திகள் வெளியாகின.அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவிற்கு நாடாளுமன்ற தேர்தலின் போது 7நாடாளுமன்ற தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா எம்.பி. சீட்டும் கொடுத்தனர்.

Advertisment

pmk

இதில் பாமக போட்டியிட்ட 7 நாடாளுமன்ற தொகுதியிலும் படு தோல்வி அடைந்தது.இதனால் பாமகவினர் ராஜ்யசபா சீட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.இதற்கு அதிமுக தலைமை அன்புமணிக்கு அந்த ராஜ்யசபா சீட் கொடுக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் தமிழகத்தில் அதிமுக,பாஜக,பாமக கூட்டணியில் சீனியர்கள் யாரும் வெற்றி பெறாத காரணத்தால் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்கலாம் என்று பாமக தலைமை முடிவெடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.