Advertisment

எதற்கு முதலமைச்சர், எதற்கு மாநில பட்ஜெட், எதற்கு மாநில செயலாளர் - அன்புமணி ராமதாஸ்

தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் அமைப்பு சார்பில் ‘அன்புமணியிடம் கேளுங்கள்’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார்கள். அதில் தகவல் தொழிநுட்பத் துறையில் இருக்கும் ஜுனியர் முதல் சீனியர்கள் வரை பங்கு கொண்டார்கள் அதில் ஒரு இளைஞர், “கஜா புயலுக்கு நிவாரனம் அனுப்பிய அனைவரும் அவர்களின் அடையாளத்தை ஒட்டி அனுப்பினார்கள். ஆனால் நீங்கள் மட்டும்தான் அதில் இருக்கும் காலாவதி தேதியை சோதித்து அனுப்பினீர்கள் அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதே சமயம் கஜா புயல், மின்சாரத்துறை, சுகாதாரத்துறை மற்றும் வேளாண் துறை எப்படி இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக்கொடுத்திருக்கிறது” என்ற அந்த இளைஞரின் கருத்திற்கு அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்து பேசினார்.

Advertisment

aa

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஒக்கி, வரதா, தானே, கஜா என்று எந்தப் புயலிலும் அரசு இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இதைவிட பெரிய புயல்களெல்லாம் இனிவரும் காலங்களில், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றத்தினால் வரும். அதனை எல்லாம் எவ்வறு சமாளிக்கப்போகிறோம் என்பதைப் பற்றிய திட்டங்கள் வேண்டும்.

நான் பேசிக்கொண்டிருக்கும் இன்று புயல் வந்து எட்டாவது நாள், இன்றும் நூற்றுக்கணக்கான கிராமங்களில் குழந்தைகளுக்கு பால், மின்சாரம், உணவு, தண்ணீர், வீடு போன்ற அதியாவிசிய பொருட்கள் எதுவும் இல்லை. இன்றுவரையும் முகாம்களில்தான் தங்கியிருக்கிறார்கள். இங்கு என்ன நிர்வாகம் நடக்கிறது. மத்திய அரசு நிதி கொடுத்தால்தான் உதவிகள் செய்யமுடியும் என்றால், எதற்கு மாநில அரசு, எதற்கு முதலமைச்சர், எதற்கு மாநில பட்ஜெட், எதற்கு மாநில செயலாளர். நான் முதலமைச்சராக இருந்திருந்தால் ஏழு நாட்களும் அங்கேயே தங்கி பணிகள் எப்படி நடக்கிறது என்பதை பார்வியிட்டிருப்பேன் அப்போதுதான் மற்ற அதிகாரிகள் எல்லாம் வந்திருப்பார்கள். அதுதான் தலைமை பண்பு. உதாரணத்திற்கு கேரளாவில் வெள்ளம் வந்தபோது அந்த மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் அங்கே இருந்து, இதுதான் தலைமை பண்பு என்று காட்டினார்.

a

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

2005-ம் ஆண்டு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை கொண்டுவந்தோம். அதன்படி தேசிய பேரிடர் மேலாண்மை என்பதை அமைந்தது. அதற்கு தலைவர் பிரதமர் என்றும், மாநில பேரிடர் மேலாண்மைக்கு மாநில முதல்வர், மாவட்ட பேரிடர் மேலாண்மைக்கு மாவட்ட ஆட்சியர் என்று தலைவர்கள் இருக்கிறார்கள். என் கேள்வி, இவர்களெல்லாம் என்ன செய்தார்கள். இதுவெல்லாம்விட புயலால் பாதிக்கப்பட்டுள் தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ 600 அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சென்னை சேலம் எட்டு வழி சாலையில் உள்ள தென்னை மரங்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ 50,000 வரை தருவதற்கு தயாராக இருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை பொறுப்பாளராக ஒருவர் இருக்கிறார் அவருக்கே கஜா புயல் எவ்வளவு வேகத்தில் அடித்தது என்று தெரியவில்லை. இவர்களெல்லாம் என்ன தொழில்நுட்ப்பம் வைத்திருக்கிறார்கள். அமெரிக்காவில் இரண்டு நாட்களுக்கு முன்பே எந்த இடத்தில், எத்தனை மணிக்கு மழைபொழியும் என்பதை துள்ளியமாக சொல்லுகிறார்கள். ஆனால் இவர்கள், எல்லாம் முடிந்தபிறகு ஹெலிகாப்டரில் போய் பார்வியிடுகிறார்கள்.

ops_eps gaja storm anbumani ramadoss
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe