Advertisment

முதியவரின் அனல் பறந்த கேள்விகளும், அன்புமணி ராமதாஸின் பதில்களும்

தகவல் தொழில்நுட்பபணியாளர்கள்அமைப்பு சார்பில் ‘அன்புமணியிடம் கேளுங்கள்’ என்ற கேள்வி பதில் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார்கள். அதில் தகவல் தொழிநுட்பத் துறையில் இருக்கும் ஜுனியர் முதல் சீனியர்கள் வரை பங்கு கொண்டார்கள். அதில், ”கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது மோடி கொடுத்த வாக்குறுதிகளான பதினைந்து இலட்சம் ரூபாய், வருடத்திற்கு ஒரு கோடி இளஞர்களுக்கு வேலை, அவர் மோடியா அல்லது மோடி வித்தை காட்டுபவரா. அவர், அம்பானி சகோதரர்கள், அதானி மற்றும் லக்‌ஷ்மி மிட்டால் ஆகிய நான்கு கார்ப்ரேட் முதலாளிகள் மூலம்தான் பிரதமரானார். இந்த கஷ்ட்டத்தை இன்னும் ஐந்து வருடத்திற்கு நாங்கள் தாங்க வேண்டுமா. அடுத்தது, நடிகர்கள் எல்லாம் 10 கோடிவரை சம்பளம் வாங்குகிறார்கள், அவர்களுக்கு எதற்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா விருதுகள் எல்லாம். அதற்கு பதிலாக ஒரு ஐஏஎஸ் அல்லது இன்று ஐடி துறையில் இருக்கும் ஒரு இளைஞனுக்கோ கொடுக்கவேண்டியதுதானே. மேலும் தமிழ்நாட்டில் முந்திரிகொட்டை மினிஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவர் மண்டையில் முடியிருக்காது. அடிக்கடி மீடியாவிற்கு பேட்டி அளிப்பார். அவரின் மகன் அதிர்ஷ்டவசமாக தென்சென்னை மினிஸ்டராக வென்றுவிட்டார். அவரை, நான் எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு என்னை நீங்கள் தென்சென்னை வேட்பாளராக நிற்கவைப்பீர்களா?” என்று கூட்டத்தில் பங்குக்கொண்ட 57 வயது முதயவர் ஒருவர் ஆவேசமாக கேள்விகளை எழுப்பினார். இந்த தீ பறக்கும் கேள்விகளை கேட்ட அன்புமணி ராமதாஸ் ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டு அதன்பின் அந்த முதியவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தொடங்கினார்.

Advertisment

aa

மோடி பிரதமர் ஆவதற்குமுன் வேளான்மை முன்னிலை படுத்தப்படும், ஒரு வருடத்திற்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும், தொழிற்புரட்சி நடைப்பெறும், நேர்மையான ஆட்சி அமையும் மற்றும் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் பதினைந்து இலட்சம் ரூபாய் போடப்படும் என்றார். ஆனால், இதுவரை எதுவும் நடக்கவில்லை.

Advertisment

இன்று இந்தியாவின் வேளான் வளர்ச்சி 1.2% மட்டுமே, இது பதினைந்து வருடத்தில் இல்லாத அளவு குறைவு. குறைந்தது 4% வேளான் வளர்ச்சி இருந்தால்தான் விவசாயி வாழவே முடியும். அவர்கள் மகிழ்ச்சியாய் வாழ வேண்டும் என்றால் இன்னும் அதிகமான வளர்ச்சி வேண்டும். ஆனால் இன்று இருக்கும் 1.2% என்பது மிக மிக மோசமான நிலைமை. நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தி எனும் ஜிடிபி 7.2% என்றும் அதனால் நாட்டின் வளர்ச்சி அதிகமாகியிருக்கிறது என்றும் மேலும் எதிர்பாத்த 7.75% வளர்ச்சியில் இருந்து 7.25% வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றும் கணக்கு சொல்லுகிறார்கள். ஆனால், உன்மையில் என்னை பொறுத்தவரை இந்த எண்களை குறிப்பிட்டு நாட்டின் வளர்ச்சியை கணிக்க முடியாது. நாட்டில் வாழும் மக்களும் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதில்தான் வளர்ச்சி இருக்கிறது. ஆனால், இன்று பெரும்பாலும் மக்கள் மகிழ்சியாக இல்லை என்பதை உணமை.

கஜா புயலின்போது மத்திய அரசின் அணுகுமுறை தமிழகத்தில் எப்படி இருந்தது. அதே கேரளா வெள்ளத்தின்போது மத்திய அரசின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பது உங்களுக்கு தெரியும்.

இதற்குமுன் மத்தியில் இருந்த அரசைவிட இப்போது இருக்கும் அரசு ஓரளவு நேர்மையாகத்தான் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் ஊழல் ஆட்சி நடைப்பெற்றுகொண்டிருக்கிறது. இது இங்கிருக்கும் பள்ளிக்கூட குழந்தைக்குக்கூட தெரியும். ஆனால், மோடிக்கு மட்டும் தெரியவில்லை. இதுப்போல் தெரிந்தும் அதனை எதிர்க்காமல் துணைப்போவதும் ஒரு வகையான ஊழல்தான்.

Professional IT anbumani ramadoss
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe