/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anbumani ramadoss 333.jpg)
மறைந்த வன்னியர் சங்க தலைவர் குருவுக்கு, அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்தில், பா.ம.க. சார்பில் மணிமண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடந்தது.
இந்த விழாவில் கலந்து கொண்ட மாநில இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக இருக்கிறோம். கடந்த 9 மாதங்களாக தேர்தல் பணியாற்றி கட்சியை பலப்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கட்சியில் சேர்ந்திருக்கிறார்கள். நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம்.
தேர்தல் கூட்டணி சம்பந்தமாக தேர்தல் அறிவித்த பிறகு நாங்கள் முடிவு எடுப்போம். அதற்கு முன்பு யார் எதை கூறினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டாம். யாருடனும் இதுவரை கூட்டணி குறித்து பேசவில்லை. இதற்கு மேலும் கூட்டணி பற்றிய செய்திகள் வந்தால் அது முற்றிலும் தவறானது. அவை வதந்திகள் அதை நம்ப வேண்டாம். இவ்வாறு கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)