2021ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து பிரதான கட்சிகளின் சார்பில் அனைத்து தொகுதிகளின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்நேற்று (23.03.2021) மாலை ஆவடி தொகுதி அதிமுக வேட்பாளர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் அம்பத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாமகவின் இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் ஆவடியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.