Mahesh Poiya Mozhi election campaign

Advertisment

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் பொன்னம்பட்டியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. திமுக திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்களை ஒவ்வொருவராக அழைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுத்தி அறிமுகம் செய்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், “எதிர்க்கட்சியாக இருக்கும்போதே உள்ளாட்சியில் 100% வெற்றி பெற்ற மாவட்டம் நமது திருச்சி மாவட்டம். தற்போது ஆளும் கட்சியாக இருக்கின்றோம். மக்கள் புத்திசாலி... அவர்களுக்கு தெரியும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று. இருப்பினும் நாம் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடர்ந்து களப்பணியாற்றி வெற்றியை பெரும் வெற்றியாக மாற்ற வேண்டும்” என கூறினார். நிகழ்ச்சியின் போது மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல்சமது மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.