style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நள்ளிரவே அவரது உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்டது. முக்கிய அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், தொண்டர்கள்,பொதுமக்கள் என அனைவரும் க.அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

இந்நிலையில் தற்பொழுது அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. வேலங்காடு மின் மயானத்தில அவரது உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது. இந்த இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, உதயநிதி ஸ்டாலின், ஆ,ராசா, கவிஞர் வைரமுத்து, திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். அதேபோல் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள், பொதுமக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.