'' Anarchy in the AIADMK ... Daruma will win again '' - OBS tweet!

அதிமுகவில் நிலவும் ஒற்றைத் தலைமை குறித்த அதிகார மோதல்கள் எழுந்திருக்கும் நிலையில், சென்னை கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வந்த அதிமுக தொண்டர் ஒருவர் ஆவேசமாக கத்தியதோடு கையில் வைத்திருந்த பெட்ரோலை மேலே ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரிடம் இருந்த பெட்ரோலை பிடுங்கி அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பதிவில், ''மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக இணைச் செயலாளருமான கேசவன் தீக்குளிக்க முயன்றதாக வந்துள்ள செய்தி எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த தருணத்தில், "தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்'' எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment