Skip to main content

வெற்றிவேலின் உடலை வீட்டின் மாடியிலிருந்து பார்த்து கதறி அழுத மனைவி...

Published on 16/10/2020 | Edited on 16/10/2020
ammk vetrivel family

 

 

அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை காலமானார்.

 

dddd

 

இன்று காலை வெற்றிவேலின் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர் வசித்த அயனாவரம் திவான் பகதூர் சண்முகம் தெருவில் உள்ள வீட்டின் அருகே கொண்டு வரப்பட்டது. 

 

vvv

 

அப்போது வெற்றிவேலின் உடலை பார்த்து வீட்டின் மாடியில் இருந்து அவரது மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டேரி மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு வெற்றிவேலின் உடலுக்கு அவரது மகன் பாரத் இறுதி சடங்கு செய்தார். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிவேல் இல்லத்தில் டிடிவி தினகரன்... குடும்பத்தினருக்கு ஆறுதல் (படங்கள்)

Published on 09/12/2020 | Edited on 09/12/2020
T. T. V. Dhinakaran met the Vetrivel family - ammk -

 

கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான வெற்றிவேல் கடந்த அக்டோபர் மாதம் காலமானார். 

 

இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளரும், வெற்றிவேலின் நெருக்கிய நண்பருமான டிடிவி தினகரன், வெற்றிவேலின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

வெற்றிவேல் மறைந்தபோது டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.  

 

மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர்.  

 

என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிப்படச் சொல்லி, இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர். 

 

T. T. V. Dhinakaran met the Vetrivel family - ammk -

 

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப்போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர்.  

 

'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. 

 

வெற்றிவேலின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

 

 

Next Story

ரஜினியை பாதித்த மரணம்!

Published on 19/10/2020 | Edited on 19/10/2020

 

vetrivel ammk - rajinikanth actor - Karate R. Thiagarajan Congress

 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழத்தின் பொருளாளரும், டி.டி.வி தினகரனின் தளபதியாகவும் இருந்த வெற்றிவேலின் மரணம் அ.ம.மு.க.வை மட்டுமல்ல அதிமுகவையும் அதிர வைத்துவிட்டது. அந்தளவுக்கு இரண்டு கட்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தவர் வெற்றிவேல். 
           

வெற்றிவேலின் மறைவையறிந்து தனியார் மருத்துவமனைக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் மற்றும் வெற்றிவேலின் நீண்டகால நண்பரான கராத்தே தியாகராஜன் ஆகியோர் விரைந்தனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட வெற்றிவேலின் உடலை கண்டு கதறினார் கராத்தே தியாகராஜன். கராத்தேவை தவிர வெற்றிவேலின் உடலுக்கு மரியாதை செய்ய யாரையும் அனுமதிக்கவில்லை மருத்துவமனை நிர்வாகம். 
      

அவரது மரணத்தை ரஜினிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார் கராத்தே தியாகராஜன். கடந்த காலங்களில் பல முறையும், சமீபகாலங்களில் இரண்டு முறையும் ரஜினியை சந்தித்துள்ள வெற்றிவேல், ரஜினியின் நட்பை பொக்கிஷமாக பாதுகாத்தவர். அதனாலேயே, வெற்றிவேலின் மறைவு ரஜினியைப் பாதித்துள்ளது. வெற்றியின் மறைவை ஜீரணிக்க முடியாமல் தவித்திருக்கிறார் ரஜினி.

 

கடந்த காலங்களில் (1996) தி.மு.க - த.மா.கா கூட்டணி உறவு உருவாவதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர்கள் கராத்தே தியாகராஜனும் வெற்றிவேலும். இவர்கள்தான், அந்தக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்த ரஜினியை அடிக்கடி சந்தித்து அரசியல் ரீதியான பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டனர். ரஜினியிடம் சில விசயங்களைப் பேசுவதற்கு கராத்தே தியாகராஜனையும் வெற்றிவேலையும் தான் அனுப்பி வைப்பார் மறைந்த தலைவர் மூப்பனார். அந்தளவுக்கு, இவர்கள் இருவரும் மூப்பனாரின் தளபதிகளாக இருந்தவர்கள்.

 

அந்த வகையில் வெற்றிவேலின் மரணம் ரஜினியை வெகுவாகப் பாதித்தது. வெற்றிவேலின் மகன் பரத்தை தொடர்பு கொண்டு ஆறுதல் படுத்தியுள்ளார் ரஜினி!