ammk vetrivel ttv dinakaran

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழக அலுவலகத்தில் மறைந்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் உருவப் படத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அஞ்சலி செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் சி.ஆர்.சரஸ்வதி, செந்தமிழன் உள்ளிட்டோரும் வெற்றிவேல் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெற்றிவேலுக்கு அஞ்சலி செலுத்தும் வீடியோவை வெளியிட்டு, "துணிச்சலின் இருப்பிடமாகவும், தூய்மையான விசுவாசத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த கழகத்தின் பொருளாளரும், என்னரும் நண்பருமான திரு.வெற்றிவேல் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலியைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பர் வெற்றி இப்போது நம்மோடு இல்லை என்பதையே இன்னமும் என் மனம் நம்ப மறுக்கிறது. இயக்கத்தின் மீதும், நம் மீதும் அவர் காட்டிய அளப்பரிய அன்பின் வழியாக எப்போதும் நம்மோடு இருப்பார் நம்முடைய வெற்றிவேல்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.