அமமுக வேட்பாளர்கள் அதிருப்தி!

தமிழகத்தில் கடந்த 18ஆம் தேதி 38 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலும் , 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதில் 18 தொகுதிகளுக்கும் அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டனர். அதில் திமுக மற்றும் அதிமுக கட்சிக்கு இணையாக செலவு செய்து தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அமமுக சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் தங்களிடம் செலவு செய்ய போதிய பணம் இல்லை, தலைமை பணம் தந்தால்தான் அதிமுகவிற்கு இணையாக தேர்தலில் செலவு செய்ய முடியும் எனவும் கூறிவிட்டனர்.

ttv

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

பின்பு அக்கட்சியின் தலைமையின் உத்தரவின் பேரில் வேட்பாளர்களுக்கு வரும் செலவில் பாதி பணத்தை கட்சியும் மீதமுள்ள பணத்தை வேட்பாளர்களும் செலவு செய்யும் படி அறிவுத்தபப்ட்டது. தேர்தல் முடிந்த பின்பு வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை கட்சி தலைமை தருவதாக உறுதியளித்தது, இதனையடுத்து வேட்பாளர்களும் தங்களின் கைகளில் இருந்த பணத்தையும், கடனுக்கு வாங்கியும் செலவு செய்துள்ளனர். ஆனால் அக்கட்சியின் தலைமையோ வாக்கு வங்கி உள்ள தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு மட்டுமே தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்ததாகவும் மீதம் இருக்க கூடிய தொகுதிகளின் வேட்பாளர்களுக்கு உத்தரவாதம் அளித்தபடி வேட்பாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்காததால் அவர்கள் கடும் அதிருப்தியை அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுகுறித்து தலைமையிடம் கேட்டு எந்த பதிலும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் வேட்பாளர்கள் உள்ளனர் என்று அமமுக வட்டாரங்கள் புலம்பிக்கொண்டு வருகின்றனர் .

ammk candidates loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe