நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் தினகரன் கட்சியில் இருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் அமமுக கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலரில் 90க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் அமமுக கைப்பற்றிய பெரும்பாலான இடங்கள் அதிமுக செல்வாக்கு மிகுந்த இடங்கள் என்றும் சொல்லப்பட்டது.

admk

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

admk

இந்த நிலையில், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அமமுக கட்சியிலிருந்து விலகிய ராமநாதபுரம் - கீழக்கரை நகரச் செயலாளர் சுரேஷ் தலைமையில் 200 பேர் எடப்பாடியை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். அதே போல் அமமுகவிலிருந்து விலகிய முதுகுளத்தூர் பேரூராட்சி செயலாளர் மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்ற முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய 13வது,15வது வார்டு உறுப்பினர்கள், போகலூர் ஊராட்சி ஒன்றிய 1வது வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 100 பேர் அதிமுகவில் இணைந்தனர். உள்ளாட்சி தேர்தலில் அமமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் இணைந்ததால் தினகரன் தரப்பு அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.