'மார்ச் 3- ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்' - அ.ம.மு.க. அறிவிப்பு!

AMMK PARTY TTV DHINAKARAN TN ASSEMBLY ELECTION

அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் எம்.எல்.ஏ. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள், வருகிற 03/03/2021 முதல் 10/03/2021 வரை காலை 10.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், தமிழகத்தில் போட்டியிட விரும்புபவர்கள் ரூபாய் 10,000, புதுச்சேரியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூபாய் 5,000 விருப்ப மனு கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம். படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாகப் பூர்த்திசெய்து தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பூர்த்திசெய்யப்பட்ட விருப்ப மனுக்களை அளிக்க மார்ச் 10- ஆம் தேதி கடைசி நாள்". இவ்வாறு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

AMMK PARTY tn assembly election TTV Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe