ammk party members join admk

நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக தோல்வியை சந்தித்ததையடுத்து, அக்கட்சியில் உள்ள நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு செல்கின்றனர். இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறும்போது, அ.ம.மு.க. தொண்டர்களால் உருவாக்‍கப்பட்ட இயக்‍கம். நிர்வாகிகள் வெளியே சென்றாலும் கட்சி மேலும் பலப்படும் என தெரிவித்து வந்தார்.

Advertisment

இந்த நிலையில் நேற்று மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகள் 19 பேர், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின்போது அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உடனிருந்தார்.

Advertisment