Advertisment

தினகரனை முதல்வராக்க அ.ம.மு.க. தீர்மானம்!

Advertisment

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் அக்கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் காணொளி மூலம் இன்று (25/02/2021) காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்,சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள்பங்கேற்றனர். அதேபோல், திருச்சி உள்பட 10 இடங்களில் இருந்து காணொளி காட்சி மூலம் அ.ம.மு.க.வினர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. எப்படி செயல்படுவது என்பது குறித்து கட்சியினருடன் டிடிவி.தினகரன் ஆலோசனை நடத்தினார்.

மேலும், கூட்டத்தில் ‘பொதுச்செயலாளர் தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைப்போம். அ.தி.மு.க.வை மீட்டெடுக்க அயராது உழைக்க வேண்டும். தேர்தல் கூட்டணிபற்றி முடிவெடுக்க பொதுச்செயலாளர் தினகரனுக்கு அதிகாரம்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

AMMK PARTY t.t.v. dinakaran
இதையும் படியுங்கள்
Subscribe