Advertisment

உதயநிதியின் உருவ பொம்மை எரிப்பு..!

AMMK members condemns udhaynithi stalin

விழுப்புரம் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்சுற்றுப் பயணம் செய்துவருகிறார். சுற்றுப் பயணத்தில் சசிகலாவை தரக்குறைவாகப் பேசியதாகக் கூறி திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சரவணம்பாக்கம் கூட்ரோட்டில், அ.ம.மு.க. முன்னாள் ஒன்றிய கழகச் செயலாளர் ஜெ.குமார் தலைமையில், அக்கட்சியினர், தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, அவரின் உருவப் பொம்மையை எரித்துப் போராட்டம் செய்தனர்.

Advertisment

இதில், ஒன்றிய பேரவை செயலாளர் பழனிவேல், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் பாசுரமேஷ், ஒன்றிய இளைஞரணிச் செயலாளர் செல்வம், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பரத், திருநாவலூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர், மாவட்டப் பிரதிநிதி, ஊராட்சி செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisment

ammk udhayanithi stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe