Advertisment

ஜெயலலிதாவிற்கு விளம்பரம் செய்த அமமுகவினர்.. காவல்துறையில் புகார்..!

AMMK people advertised  for Jayalalithaa

பிப். 24ஆம் தேதி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி திருச்சியில் உள்ள பல்வேறு சுவர்களில் பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்கள் எழுதப்பட்டு வருகிறது. அதில் புத்தூர் பகுதியில் அமமுகவின் திருச்சி மாவட்ட தலைவர் சீனிவாசன், 7 அடி உயரம் உள்ள சுவரில் 80 அடி அகலம் வரை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தும் சசிகலாவின் பெயரையும் எழுதி வைத்திருந்தார்.

Advertisment

AMMK people advertised  for Jayalalithaa

இந்நிலையில் நேற்று (17.02.2021) இரவு மர்ம நபர்கள் அவர் எழுதி வைத்திருந்த அந்தச் சுவர் விளம்பரத்தை அழித்துவிட்டு, அவர்களுடைய பெயரை எழுதி வைத்துள்ளனர். இதுகுறித்து புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த அமமுகவின் மாவட்டச் செயலாளர், ‘எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் சுவர் விளம்பரங்களை அழிக்கும் நடவடிக்கை தொடர்ந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை சுவர் விளம்பரம் செய்ய சுமார் பத்தாயிரம் செலவு செய்யப்படுகிறது. எனவே, சுவர் விளம்பரங்களை அழித்த அந்த மர்ம நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

Advertisment

ammk admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe