ammk

அ.ம.மு.க தினகரன் தி.மு.க. நடவடிக்கைகளை அப்படியே பின்பற்ற நினைப்பதாகக் கூறுகின்றனர். இதுபற்றி விசாரித்த போது, சசிகலா ரிலீசாவதுக்குள் தங்கள் கட்சியைப் பலப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கும் தினகரன், கட்சி நிர்வாகிகளோடு மனம்விட்டுப் பேச விரும்ப நினைக்கிறார் என்று கூறுகின்றனர். அதையறிந்த அவர் கட்சியின் ஐ.டி. விங் நிர்வாகிகள், இந்த ஊரடங்கு காலத்தில் அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் முடங்கினாலும், தி.மு.க மட்டும் இதில் விதிவிலக்காக இயங்கிக் கொண்டு இருக்கிறது.

Advertisment

Advertisment

அதாவது, ஸ்டாலின் ஸூம் செயலியைக் கையில் எடுத்து, காணொலி வழியாக மா.செக்களை தன் பார்வையில் வைத்துக்கொண்டு பரபரப்பாக இயங்கிவருகிறார். அந்த ஃபார்முலாவை நாமும் கையில் எடுக்கலாம் என்று தினகரனிடம் சொல்லியிருக்கிறார்கள். இதையே கட்சிப் பிரமுகர்களும் சொல்ல, அது குறித்து யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம்தினகரன். அதனால் விரைவில் அவர் அதிரடி கிளப்புவார் என்று அவர் தரப்பு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.