Skip to main content

அமமுக தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்தார் டிடிவி தினகரன்

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

அமமுக பொதுச்செயலாளரும், டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி எம்எல்ஏவுமான டிடிவி தினகரன், கட்சியின் தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்துள்ளார்.

 


 

 

 

ttv


 

துணைப்பொதுச்செயலாளராக பி.பழனியப்பன், எம்.ரெங்கசாமி ஆகியோர் நியமிக்கப்படுவதாகவும், பொருளாளராக வெற்றிவேல், தலைமை நிலையச் செயலாளராக ஆர்.மனோகரன், கொள்கை பரப்புச் செயலாளராக சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் நியமிக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 


 

நடந்து முடிந்த 39 நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலிலும் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களிலும் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததால் அமமுகவில் இருந்த நிர்வாகிகள் திமுக மற்றும் அதிமுகவிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று கர்நாடக மாநிலம் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளை அறிவித்தார் டிடிவி தினகரன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி.தினகரன் போட்டியிடும் தொகுதி? 

Published on 20/01/2021 | Edited on 20/01/2021

 

ddd

 

சசிகலா, வரும் 27ஆம் தேதி பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையாகிறார். இதனை அக்கட்சியினர் பெரிய அளவில் கொண்டாட உள்ளனர். அதிமுக - அமுமக இணையுமா என்ற விவாதங்கள் அரசியல் களத்தில் நடந்து வரும் வேளையில், சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு இல்லை என்று மோடி, அமித்ஷாவை சந்தித்தப் பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (19 ஜன.) தெரிவித்துள்ளார்.

 

இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுகவினர் தங்கள் பலத்தைக் காட்டவும் தயாராகி வருகின்றனர். மேலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைத்துள்ளது. இதனை அக்கட்சியினர் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், வரும் சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டம், உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக அமமுகவில் சிலர் தெரிவித்துள்ளனர். 

 

ஏற்கனவே இந்தத் தொகுதியை அக்கட்சியினர் தேர்ந்தெடுத்து அதற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும், தினகரன் தங்குவதற்கும் கட்சி அலுவலகம் செயல்படுவதற்கும் வீடு பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், தினகரனுக்கு நெருக்கமானவர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். பெரியகுளம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தினகரன். இதனால் அருகில் உள்ள உசிலம்பட்டியில் நன்கு அறிமுகம் ஆனவர் என்பதால், வரும் தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் பலத்த போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Next Story

வெற்றிவேல் இல்லத்தில் டிடிவி தினகரன்... குடும்பத்தினருக்கு ஆறுதல் (படங்கள்)

Published on 09/12/2020 | Edited on 09/12/2020
T. T. V. Dhinakaran met the Vetrivel family - ammk -

 

கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த அமமுக பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான வெற்றிவேல் கடந்த அக்டோபர் மாதம் காலமானார். 

 

இந்தநிலையில் அமமுக பொதுச்செயலாளரும், வெற்றிவேலின் நெருக்கிய நண்பருமான டிடிவி தினகரன், வெற்றிவேலின் இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 

 

வெற்றிவேல் மறைந்தபோது டிடிவி தினகரன் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், ''அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான வெற்றிவேல் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.  

 

மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோரின் பேரன்பைப் பெற்றவர். என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர்.  

 

என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன் என்று உறுதிப்படச் சொல்லி, இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர். 

 

T. T. V. Dhinakaran met the Vetrivel family - ammk -

 

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப்போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர்.  

 

'வெற்றி... வெற்றி' என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிறபோதே எதற்காகவும் கலங்காத என் உள்ளம் கலங்கித் தவிக்கிறது. 

 

வெற்றிவேலின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன். நம்முடைய லட்சியப் பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்'' எனக் குறிப்பிட்டிருந்தார்.