Advertisment

அதிமுகவிற்கு தாவிய அமமுக முக்கிய நிர்வாகி..! பின்னணி என்ன? 

AMMK chief executive who joined to ADMK

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வந்த ஜே.சீனிவாசன் இன்று (10.03.2021) அதிகாலை எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Advertisment

இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், சசிகலா தலைமையேற்று வழிநடத்த வேண்டிய கட்சியானது, தற்போது அவர் அரசியலிலிருந்து விலகுவதாக கொடுத்திருந்த அறிக்கையால் தங்களுடைய அரசியல் வாழ்க்கைபாதிக்கும். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக டிடிவி தினகரனை நம்பி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியில் இருந்த அவர், மீண்டும் தன்னுடைய தாய் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளார் என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தொடர்ந்து சீனிவாசனை நட்புறவாகவும் கட்சியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்றும் தாயகத்தை விட்டு ஒருபோதும் பிரியக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டதின் அடிப்படையில் அவர் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

admk ammk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe