ammk-dmk

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் விருதுநகர் தெற்கு வட்டம், அமமுகவைச் சேர்ந்த மாநில எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் டாக்டர் ஏ.ஏ.எஸ்.ஷ்யாம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.ஏ.மணிகண்டன் ஆகியோர் தலைமையில் அமமுக கட்சியைச் சேர்ந்த 12வது வார்டு நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தி.கணபதி திருமலைக்குமார், 10வது வார்டு நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் வி.முருகன், மாவட்ட நெசவாளர் அணி இணைச் செயலாளர் ஆர்.கதிரேசன், நகர மீனவர் அணிச் செயலாளர் வி.வேலுமணி, மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் வி.வி.துரைகற்பகராஜ் மற்றும் 25க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

Advertisment

ammk-dmk

அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சியின்போது விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கேகேஎஸ்எஸ்ஆர் இராமச்சந்திரன் எம்எல்ஏ, விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு எம்எல்ஏ, இராஜபாளையம் எம்எல்ஏ எஸ்.தங்பாண்டியன், ராஜபாளையம் நகரச் செயலாளர் எஸ்.இராமமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisment