Advertisment

அம்மி... இல்ல மம்மி... பூங்கோதை, ஜெயக்குமார், செங்கோட்டையன் விவாதம்

தமிழக சட்டசபையில் பேசிய திமுக உறுப்பினர் பூங்கோதை, கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகை பொருட்களை அதிகம் உட்கொள்வதால் சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். கடைகளில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளில் எவ்வளவு கலோரிகள் இருக்கிறது, அந்த இனிப்பு தின்பண்டங்களை அதிகமாக உட்கொண்டால் உடலில் என்ன பாதிப்பு வரும் என்பதை, சிகரெட் பாக்கெட்டில் உள்ள விழிப்புணர்வு போல் விளம்பரம் செய்ய அரசு உத்தரவிட வேண்டும் என்று பூங்கோதை கூறினார்.

Advertisment

assembly speech

அப்போது குறுக்கிட்ட முதல்வர், உறுப்பினர் பூங்கோதை நல்ல கருத்தை கூறியுள்ளார், எனவே இது குறித்து அரசு பரிசீலிக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து பூங்கோதை பேசும்போது, ஆடிக்காற்றில் அம்மிக்கல்லுடன் அம்மாவின் ஆட்சி பறந்து போய்விடும் பேசினார்.

Advertisment

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், பழைய பழமொழிகள் இக்காலத்திற்கு பொருந்தவே பொருந்தாது. எப்போதும் எங்கள் மம்மி ஆட்சிதான். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இப்படி எல்லாம் பேசுவார்கள் என்று தெரிந்து தான், ஜெயலலிதா அன்றைக்கே அனைவருக்கும் மிக்ஸி கொடுத்துள்ளார், என்றைக்கும் ஜெயலலிதா ஆட்சி தான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசும்போது, 'ஆடிக்காற்றும் அடிக்கப்போவதுமில்லை, அம்மிக்கல்லும் பறக்கப்போவதில்லை, ஜெயலலிதா ஆட்சியும் பறக்கப்போவதில்லை' என கூறினார்.

assembly jayakumar poongothai Speech
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe