Advertisment

அமித்ஷாவை தொடர்ந்து ஸ்மிருதிராணி... கொங்குமண்டலத்தை குறிவைக்கும் பாஜக

bjp

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6972022440"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

ஈரோடு மற்றும் கொங்கு மண்டலத்தில் சமீப காலமாக பா.ஜ.க. தலைமை பிரச்சாரம் செய்துகொண்டு வருகிறது. சென்ற மாதம் கோவை பகுதியில் சுற்றுப்பயணம் செய்தார் மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து பிரதமர் மோடி சென்ற 10 ந் தேதி திருப்பூர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அடுத்து அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் 14.2.19 காலை கலந்து கொள்கிறார். ஜவுளி சந்தை எனப்படும் "டெக்ஸ்வேலி" வணிக வளாகத்தில் நடைபெறும் நெசவாளர் சந்திப்பு கூட்டத்தில் காலை 11 மணிக்கும் தொடர்ந்து ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்ட பா.ஜ.க. பூத் கமிட்டி பொறுப்பாளர்களின் கூட்டத்திலும் பங்கேற்கும் அமித்ஷா கட்சியினருக்கு பல ஆலோசனை மற்றும் உத்தரவுகள் வழங்கிவிட்டு செல்கிறார். இவர் தனி ஹெலிகாப்டர் மூலம் வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisment

தொடர்ந்து அடுத்தடுத்த பா.ஜ.க. திட்டங்களில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி தொடங்கி வட மாநில இளம் பெண் அரசியல் முகங்கள் தமிழ்நாட்டில் சுறுசுறுப்பாக தேர்தல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்களாம். தாமரை பார்ட்டி கலகலப்பாக கலக்க வர்றாங்கப்பா நம்ம தமிழ்நாட்டுக்கு... என அ.தி.மு.க. ர.ர.க்கள் எதிர்பார்ப்போடு கூறுகிறார்கள்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6677891863"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Tamilnadu Smiriti Irani AmitShah
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe