Advertisment

நாங்கள் செய்வது தவறா? போராட்டம் பண்ணாலும் எதுவும் மாறாது... அமித்ஷா அதிரடி பேச்சு... கோபத்தில் எதிர்க்கட்சியினர்!

2014, டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தான் மக்களை தவறாக வழிநடத்துகிறது என பாஜக சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

Advertisment

amithsha

இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் பேசிய அமித்ஷா, குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து தவறாக கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றனர். இங்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். குடியுரிமை சட்ட திருத்தம் ஒருபோதும் திரும்பப் பெறப்பட மாட்டாது. யார் போராட்டம் நடத்தினாலும் சரி. எதிர்க்கட்சிகளால் நாங்கள் பயந்துபோகவில்லை. இதற்காக போராடுபவர்கள் தொடர்ந்து போராடலாம் போராடிக்கொண்டே இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisment

காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தவறான பிரசாரத்தை மேற்கொள்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் பொதுவெளியில் விவாதிக்க தயாரா? போராட்டங்கள் நடைபெற்றாலும் குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படமாட்டாது. நாங்கள் எதிர்ப்பால் வளர்க்கப்பட்டோம். எனவே, எதிர்ப்பைப் பற்றி நாங்கள் வருத்தப்பட போவதில்லை என்றும் கூறினார்.

bjp

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின்போது அங்கு இந்துக்கள், புத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களை உள்ளடக்கிய சிறுபான்மையினர் மொத்தம் 23 சதவீதம் பேர் இருந்தனர். ஆனால், இன்றைக்கு இந்த எண்ணிக்கை வெறும் 3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அவர்கள் எங்கே போனார்கள்? அவர்கள் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது மதமாற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும். பாகிஸ்தானில் பலர் அரண்மனை வீடுகளை விட்டு தற்போது குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி அவர்களுக்கு வீடுகளை மட்டும் வழங்கவில்லை. அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், நல்வாழ்வையும் அமைத்துத் தருகிறார். இது தவறா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கும், தேசிய குடிமக்கள் பதிவேடு எனப்படும் என்.ஆர்.சி.க்கும் மாணவர்கள், அரசியல்வாதிகள், சிறுபான்மையினர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.

amithsha citizenship amendment bill politics Speech
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe