இந்தியா முழுவதும் பா.ஜ.க. வாரிச் சுருட்டி ஜெயித்திருந்தாலும், தமிழகம் காலை வாரிவிட்டது உங்களுக்குத் தெரியும். தோல்விக்கான காரணம் என்னன்னு தமிழக பா.ஜ.க.விடம் விளக்கம் கேட்டது டெல்லி தலைமை. எடப்பாடியும் அமைச்சர்களும் ஒத்துழைக்கவில்லை. ஓ.பி.எஸ்.சும் நம்பிக்கையா நடந்துக்கலை. அதிலும் தனது மகன் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் தான் ஓ.பி.எஸ். கவனம் செலுத்துனாரு. அ.தி.மு.க. தொண்டர்களும் நமக்கு ஓட்டுப் போடவில்லைன்னு கமலாலயம் விளக்கம் சொல்லியது.

Advertisment

bjp

தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிட்ட 5 தொகுதிகளில் பூத்வாரியாக கிடைத்த ஓட்டு விபரங்களையும் கேட்டி ருந்தார். பி.ஜே.பி. போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் தோல்வி அடைந்ததோடு, ஓட்டு லீடிங்கும் கன்னா பின்னான்னு எகிறியிருப்பதைப் பார்த்து ரொம்பவே அதிருப்தி அடைஞ்சிருக்கார் அமித்ஷா.இதனால் வெகு விரைவில் தமிழக பாஜகவில் மாற்றங்கள் வரும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.