ப.சிதம்பரத்தை பழிக்கு பழி வாங்குகிறாரா அமித்ஷா?

கடந்த 2007- ம் ஆண்டு, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா என்ற நிறுவனத்தில் 305 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தில் அவசர மனு ஒன்று சிதம்பரம் சார்பாக தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரமணா, இது ஊழல் தொடர்பான விவகாரம் என்பதால் உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

congress

இது காங்கிரஸ் தரப்பிற்கும், சிதம்பரம் தரப்பிற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிதம்பரம் மீதான மத்திய அரசின் இந்த நடவடிக்கை குறித்து விசாரித்த போது, 2010ம் ஆண்டு உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது அமித்ஷா குஜராத் போலி எண்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல் இன்று அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ள நிலையில், முன்னாள் உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம் கைது செய்யப்படும் நிலையில் உள்ளார். இது பழி வாங்கப்படும் நடவடிக்கை என்று அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவரை கைது செய்ய போனபோது அவரை காணவில்லை போன்ற தோற்றத்தையும் உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. முன்ஜாமீன் மனு மட்டுமே தள்ளுபடி ஆனது என்பது குறிப்படத்தக்கது.

amithsha congress P chidambaram politics
இதையும் படியுங்கள்
Subscribe