அமித்ஷாவின் புது விதமான தமிழக அரசியல் திட்டம்! அதிர்ச்சியில் திமுக!

இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அமித்ஷா தமிழ்நாட்டு அரசியல் குறித்தும் நிர்வாகிகளிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் அதிமுக சார்பாக முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும் கலந்து கொண்டனர். யாரும் எதிர்பார்க்காத நிலையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த விழாவில் கலந்து கொண்டார். புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்த விழாவில் திமுக, காங்கிரஸ் சார்பாக யாரும் கலந்து கொள்ளவில்லை.

bjp

அதிமுக, பாஜக மற்றும் ரஜினி இந்த விழாவில் பங்கேற்றது அனைத்து அரசியல் தரப்பையும் உற்று கவனிக்க வைத்துள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினி தேர்தலில் போட்டியிடுவேன் என்று ஏற்கனவே அறிந்துள்ளார். இதனையடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் ரஜினி ஆகிய மூவரையும் கூட்டணி வைத்து 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்க அமித்ஷாவின் திட்டமாக சொல்லப்படுகிறது. மேலும் திமுக மீது அதிருப்தியில் இருக்கும் மு.க.அழகிரியையும் இந்த கூட்டணியில் இழுக்க அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். அதோடு இந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்த கட்சிகளையும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்கவும் அமித்ஷா திட்டம் தீட்டியுள்ளதாக சொல்கின்றனர். அமித்ஷாவின் இந்த திட்டத்தால் திமுகவும் அரசியல் வியூகங்களை வகுக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

admk amithsha rajinikanth stalin
இதையும் படியுங்கள்
Subscribe