ADVERTISEMENT

மோடியை மிஞ்சிய அமித்ஷா! ஆர்.எஸ்.எஸ் போட்ட அதிரடி திட்டம்! 

11:34 AM Aug 08, 2019 | Anonymous (not verified)

காஷ்மீர் விவகாரத்தில் மோடி அரசு எடுத்திருக்கும் அதிரடி நடவடிக்கை, ஒட்டுமொத்த இந்தியாவிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புச்சலுகைகள் தரும் அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவையும், வெளி மாநிலத்தவர் அங்கே சொத்து வாங்கி சலுகைகள் பெறுவதை தடை செய்யும் 35ஏ பிரிவையும், மோடி அரசு ரத்து செய்ததை நாட்டின் ஒற்றுமைக்கான சாதனையா பா.ஜ.க.வும் காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியா எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் ராமர் கோவில் கட்டுவது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவது, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதுங்கிறதெல்லாம் பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.ஸின் நெடுங்காலத் திட்டம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


அதைத்தான் இப்ப மெஜாரிட்டி பலம் கொண்ட தங்கள் ஆட்சி மூலம் பா.ஜ.க. நிறைவேற்றியிருக்கு. கடந்த சிலநாட்களா ஒட்டுமொத்த காஷ்மீரையும் ராணுவக் கெடுபிடிக்குள் நிற்க வச்சிட்டுதான், காஷ்மீரின் சலுகைகளைப் பறிச்சிருக்கு மோடி அரசு. இதில் சூத்ரதாரியா செயல்பட்டவர்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷா.'' கடந்த ஐந்து ஆண்டு காலம் முழு மெஜாரிட்டியோடு இருந்தும், காஷ்மீரின் சிறப்புச் சலுகைகளை நீக்க மோடி அரசால முடியலை. அப்ப, உள்துறை அமைச்சரா பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங் இருந்தாரு. 370ஐ நீக்க அவர்களால் முடியலைங்கிற ஆதங்கம், பா.ஜ.க.வின் கொள்கைத் தலைமையான ஆர்.எஸ்.எஸ்.சுக்கு இருந்தது. அந்த ஆதங்கத்தை, உள்துறை அமைச்சர் பதவியில் உட்கார்ந்த வேகத்திலேயே பா.ஜ.க.வின் தலைவரான அமித்ஷா நிவர்த்தி பண்ணிட்டாரு. இது ஆர்.எஸ்.எஸ்.சின் தலைமையை மனம் குளிரவச்சிருக்குனு டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.இந்த காஷ்மீர் விவகாரத்தில் மோடியை அமித்ஷா மிஞ்சிட்டதா நினைக்கும் ஆர்.எஸ்.எஸ். அடுத்த திட்டத்துக்கு தயாராகிவிட்டதாக சொல்கின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT