Advertisment

அமித்ஷாவிற்கு திடீர் உடல்நிலைக் குறைவு...பிரச்சாரம் ரத்து...அதிர்ச்சியில் பாஜகவினர்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நிலையில் இன்று அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இன்று கலந்து கொள்ள திட்டமிட்டிருந்த ஹரியானா பிரசார கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் 21ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

bjp

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள படேகாபாத் மாவட்டத்தின் தோஹானா, சிர்சா மாவட்டத்தின் எல்லெனாபாத் மற்றும் ஹிசார் மாவட்டத்தின் நர்நாடு பகுதிகளில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மூன்று தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மேற்கண்ட மூன்று பிரசாரக் கூட்டங்களில் அவரால் பங்கேற்க இயலவில்லை என சிர்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா டக்கல் பாஜக தொண்டர்களிடையே பிரச்சாரம் செய்யும் போது தெரிவித்தார். அமித்ஷாவிற்கு திடீர் உடல் நிலை சரியில்லாமல் பிரச்சரத்தில் பங்கேற்காதது பாஜக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

campaign Election politics amithsha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe