அமித்ஷா வழக்கில் தீர்ப்பு கொடுத்த நீதிபதிக்கு கவர்னர் பதவி? 

பா.ஜ.க.வின் நன்மதிப்பில் இருந்த கேரள கவர்னர் சதாசிவத்தின் பதவிக் காலம் முடிய இன்னும் 2 மாத காலம் அவகாசம் இருக்கும்போதே, அவருக்கு பதில் புது கவர்னராக ஆரிப் முகமது கான் நியமிக்கப்பட்டிருப்பது சதாசிவத்திற்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. பாஜக அரசு தன்னை ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா இதில் எதாவது ஒரு மாநிலத்திற்கு கவர்னராக நியமிக்க வேண்டும் என்று சதாசிவம் கோரிக்கை விடுத்தார். அமித்ஷாவோடு தொடர்புடைய போலி என்கவுண்டர் வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு சொன்னவர்தான் சதாசிவம்.

bjp

நீதிபதி பதவியிலிருந்து அவர் ரிடையர்டு ஆனாலும் கேரள கவர்னராக பதவி கொடுக்கப்பட்டது. இப்போது பதவி நீக்கப்பட்டதில் அப்செட்டான அவர், மத்திய அரசு தன்னை உயர்பதவி ஒன்றில் உட்கார வைக்க வேண்டும் என்று எண்ணியதாக சொல்லப்படுகிறது. முதல்வர் எடப்பாடிக்கும் மத்திய அரசுக்கும் உறவுப் பாலமாக செயல்பட்டவர் சதாசிவம். அவரிடம் எடப்பாடி, "டெல்லி உங்களை கைவிட்டாலும் நாங்க கைவிடமாட்டோம் என்று கூறியிருக்கிறார். மேலும் அவரை அரசியலுக்கு வரும்படியும் அழைப்பு விடுத்ததாக சொல்லப்படுகிறது.

amithsha governor Judge Kerala
இதையும் படியுங்கள்
Subscribe