Advertisment

அமித்ஷா வருகை... அவசரக் கூட்டம் கூட்டியுள்ளதா அ.தி.மு.க தலைமை?

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நாளை சென்னைவரவுள்ளார்.இதனைத் தொடர்ந்து,இன்று அ.தி.மு.க அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது.

Advertisment

அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர், துணைமுதல்வர் தலைமையில் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. மேலும்,மாவட்டச் செயலாளர்களுடன் ஒருங்கிணைப்பாளர்,இணை ஒருங்கிணைப்பாளரின்ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.

Advertisment

இந்தக் கூட்டத்தில் தேர்தல் நெருங்குவதால் அனைத்து மாவட்டத்திலும் நிலவரம் எப்படி உள்ளது. அடுத்தகட்டபணிகள் என்னென்ன என்பது குறித்துஆலோசனைதொடங்கியது. அதில், நம்முடன் கூட்டணி பற்றி அமித்ஷா பேச உள்ளார். அதனால், நீங்கள் கொடுக்கும் உத்தரவாதத்தை வைத்துத்தான் கூட்டணி பற்றிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தலைமைதெரிவித்துள்ளது.

விழா முடிந்ததும், மாலை 06.30 மணிக்கு, மீண்டும் ஓட்டல் லீலா பேலசுக்கு மத்திய மந்திரி அமித்ஷா வருகிறார். அங்கு,தமிழக பா.ஜ.கமாநில, மாவட்ட நிர்வாகிகளையும், பல்வேறு அணிகளின் தலைவர்களையும் அமித்ஷா சந்தித்துப் பேசுகிறார். அதன் பிறகே நம்மிடம் அமித்ஷா தமிழக சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கஉள்ளார். கூட்டணி குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்தநிலையில் தான், இந்தக் கூட்டத்தையே கூட்டியுள்ளது ஆளும் அ.தி.மு.க எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

Amit shah aiadmk
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe