Advertisment

அமித் ஷா ஒரு பனங்காட்டு நரி! - பாஜக எஸ்.ஆர்.சேகர்  

கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. பாஜக முன்னிலை வகிக்கிறது. இது குறித்து சென்னையில் பாஜகவை சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், செய்தியாளர்களிடம் பேசியது :

Advertisment

amit sekar

'பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது' என்று கூறுவார்கள். கர்நாடக தேர்தல் வேலைகள் தொடங்கிய போது, ஊடகங்களும் எதிர்கட்சிகளும், கருத்துக்கணிப்புகளும் ஏகப்பட்ட சலசலப்பை கொடுத்தன. ஆனால், நாங்கள் இந்த சலசலப்பையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கீழ் மட்டத்தில் வேலை செய்தோம். இப்பொழுது தனிப்பெரும் கட்சியாக வெற்றியை நோக்கிச் செல்கிறோம். எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா, எந்த சலசலப்புக்கும் அஞ்சாத பனங்காட்டு நரி போன்றவர். அரசியல் என்பது ஆர்ட் அல்ல சயின்ஸ். அது அறிவியல். அந்த அறிவியலின் வல்லுநர் அமித் ஷா. மிகச் சரியாக வழிகளை வகுத்து பூத் அளவில் வேலைகள் செய்து வெற்றியை பெற்றிருக்கிறார். காங்கிரஸ் இதையெல்லாம் விட்டுவிட்டு, தொடர்ந்து ஜாதி, மத அரசியலை செய்து வருகிறது. மக்கள் இனியும் ஏற்கமாட்டார்கள்.

Amit shah karnataka election
இதையும் படியுங்கள்
Subscribe