Advertisment

''அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை... நாளை மறுநாள் அனைத்துக்கட்சி கூட்டம்''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

'' Amit Shah did not give time ... All party meeting tomorrow '' - Chief Minister MK Stalin's speech

கரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாகவே முன்பு நடந்ததை போல் சென்னை கலைவாணர் அரங்கில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டம் வரும் 7 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டது.

Advertisment

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவையின் கேள்வி நேரம் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது. இன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. மருத்துவத்துறையில் தமிழ்நாடே முன்னோடி மாநிலமாக உள்ளது. மாநில நிதியில் கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான உரிமையை நீட் தேர்வு பறித்துவிடுகிறது. எந்த ஒரு நுழைவுத்தேர்வு என்றாலும் அது ஏழை, எளிய மாணவர்களைப் பாதிக்கும். நீட் விலக்கு மசோதா ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு இன்னும் அனுப்பப்படவில்லை. நீட் விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. எனவே இந்த சூழ்நிலையை கருத்தில்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நாம் ஒருமித்த நிலைப்பாட்டினை எட்டுவதற்கு சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தை நாளை மறுநாள் 8/1/2022 அன்று நடத்த ஏற்பாடு செய்துள்ளோம் அதில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து நீட்டுக்கு எதிராக சட்டப்போராட்டம் தொடரும்'' என்றார்.

Advertisment

all party meeting amithshah neet exam tn assembly
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe