
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ளார். நேற்று இரவு சென்னைக்கு வந்தஅமித்ஷா, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் தங்கி இருக்கிறார். அரசியல் குறித்த சந்திப்பிற்காக அமித்ஷா தமிழகம் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜகவின் மாநில பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் அமர் பிரசாத் ரெட்டி, காயத்ரி ரகுராம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட 20 பேர் அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75 வது ஆண்டு விழா நிகழ்வில் பங்கேற்ற பிறகு, பிற்பகல் 2 மணிக்கு தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு அமித்ஷா வர இருப்பதாகவும்கூறப்படுகிறது. கமலாலயத்தில் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். அதேபோல் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவில் இணையும் நிகழ்வு அமித்ஷா முன்னிலையில்நடைபெற இருப்பதாகவும் பாஜக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow Us