Advertisment

இடைத்தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் நாளை தீர்ப்பு; அதிமுகவில் பரபரப்பு

Amid by-election frenzy, verdict tomorrow- AIADMK stirs

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் பரப்புரை சூடு பிடித்திருக்கும் நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வெளியிட இருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

கடந்த வருடம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவிக்கக் கோரி ஓபிஎஸ் தரப்பு வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. மேலும் ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக வேட்பாளரை தேர்வு செய்ய அறிவுறுத்தல் ஒன்றையும் கொடுத்திருந்தது. அதன்படி அதிமுக வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்து தீவிரமாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், நாளை பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பைஏற்படுத்தியிருக்கிறது.

Advertisment

verdict supremecourt ops_eps admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe